'ரன் பேபி ரன்' இயக்குநருடன் கைகோர்த்த ஆர்யா

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஆர்யா நடிக்கவுள்ளார்.மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த வினோத குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
'ரன் பேபி ரன்' இயக்குநருடன் கைகோர்த்த ஆர்யா
Published on

நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்திற்கான தகவல் வெளிவந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'ரன் பேபி ரன்' திரைப்படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஆர்யா நடிக்கவுள்ளார்,

மலையாளத்தின் பிரபல கதை ஆசிரியரான முரளி கோபி இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இவர் கதையில் உருவான லூசிபர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த வினோத குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது,

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com