சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா - ரெஜினா கசாண்ட்ரா

இருவரும் நிகழ்ச்சி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
Arya and Regina
Published on: 

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வரும் நடிகர் ஆர்யா தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக களமிறங்குகிறார். ஆர்யா மட்டுமின்றி பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ராவும் இதே நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்குகிறார்.

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியில் நடுவர்களாக இணைந்துள்ள ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா சமீபத்தில் நடந்த அதன் துவக்க விழாவில் கலந்துகொண்டு, நிகழ்ச்சி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள். ஒவ்வொருத்தரும் தங்களின் ஸ்டைல், ஆளுமை, திறமை என தங்களுக்கே உரிய விதத்தில் இந்த போட்டியில் களமிறங்குகிறார்கள்.

ஆர்யா கருத்து:

நிகழ்ச்சி குறித்து பேசிய நடிகர் ஆர்யா, "இது 100 சதவீதம் முழுமையான சந்தோஷம் மற்றும் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சி.

மிகவும் சுவாரஸ்யமாக ஆண் மற்றும் பெண் பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர். மாஸ் பசங்களும் கிளாஸ் பெண்களாகவும் அவர்களது ஸ்டைல், திறமை, எமோஷன் என எல்லாவற்றையும் வெளிப்படுத்த போகிறார்கள்.

இது வெறும் போட்டி மட்டும் கிடையாது. சந்தோஷம், நட்பு மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்," என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com