இன்று மாலை வெளியாகும் Arya40 திரைப்படத்தின் 'டைட்டில் டீசர்'!

என் படங்களில் எனக்கு பொருத்தமான கதாநாயகிகள் அமைவதில்லை என்று நீண்ட காலமாகவே ஆதங்கப்பட்டு வந்தேன்.
Arya40
Published on: 
Summary

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 40-வது திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ 'டைட்டில் டீசர்' இன்று மாலை 5:00 மணிக்கு வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டீசர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைட்டில் டீசர்

இன்று மாலை 5:00 மணிக்கு வெளியாகும் டைட்டில் டீசர் மூலம் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த முழு விபரங்களும் தெரியவரும்.

ராஜாராணி போன்ற காதல் கதை

ஆர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

சமீபத்தில் இதுகுறித்து பேசிய அவர், "`ஆர்யா 40' திரைப்படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் நடிப்பில் வெளியாகும் இதமான காதல் கதையாக அமையும்.

இது 'ராஜா ராணி' போன்ற ஒரு காதல்-நகைச்சுவை வகையைச் சேர்ந்த படமாக இருக்கும். அதே சமயம், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்காக இதில் கூடுதல் உணர்வுபூர்வமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

என் படங்களில் எனக்கு பொருத்தமான கதாநாயகிகள் அமைவதில்லை என்று நான் நீண்ட காலமாகவே ஆதங்கப்பட்டு வந்தேன்.

அதனால், 'ஆர்யா 40' திரைப்படம் முழுவதும் அந்த இரண்டு கதாநாயகிகளுடன் மட்டுமே நான் உரையாடுவது போல கதையை அமைத்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தும் அந்த கதாநாயகிகளுடனேயே அமைந்திருக்கும். இந்தப் படத்தை நானே தயாரித்துள்ளேன் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com