அர்ஜூன் தாஸ் நடிக்கும் "BOMB" படத்தின் டீசர் நாளை ரிலீஸ்

விஷால் வெங்கட் பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.பாம்ப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
அர்ஜூன் தாஸ் நடிக்கும் "BOMB" படத்தின் டீசர் நாளை ரிலீஸ்
Published on

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மாலை 4:56 மணிக்கு பாம் படத்தின் டீசர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com