அர்ஜுன் தாஸ் - அதிதி நடித்த Once More படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.. படத்தின் இசையை ஹேஷம் அப்துல் வஹாப் மேற்கொண்டுள்ளார்.
அர்ஜுன் தாஸ் - அதிதி நடித்த Once More படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் அறிவிப்பு!
Published on

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தின் இசையை ஹேஷம் அப்துல் வஹாப் மேற்கொண்டுள்ளார்.

இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான மீண்டுமா? என்ற பாடலை நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com