

மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'அரிகொம்பன்'. இத்திரைப்படத்தின் 'டீசரை' இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் தனது x பக்கத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ளார். தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காடுகளின் பின்னணியில் பழங்குடியின மக்களுக்கும் காட்டு யானைக்குமான உண்மைச் சம்பவ வாழ்வாதாரப் போராட்டத்தை விறுவிறுப்பாகக் காட்டுகிறது.
மிதுன் மகேஸ்வரன் இயக்கி, நடித்துள்ள இத்திரைப்படம், சஜிஷ்ணா சேவியர் இசையில் பல நட்சத்திரப் பட்டாளங்களுடன் வரும் டிசம்பர் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
அந்த வரிசையில், தற்போது கேரள மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிஜ சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'அரிகொம்பன்'.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை பிரபல இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அடர்ந்த காடுகளின் பின்னணியில், பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு, ஒரு வலிமைமிக்க காட்டு யானை நுழைந்த பிறகு ஏற்படும் உயிர் பிழைப்பதற்கான போராட்டத்தை இந்த டீசர் விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மிதுன் மகேஸ்வரன் எழுதி, இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் சஜிஷ்ணா சேவியர், தேவிகா கிருஷ்ணன், இயக்குநர் சுப்ரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆதிரா, முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், மேஜிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு சஜிஷ்ணா சேவியர் இசையமைக்க, ஆர்.எஸ். அனிஷ்லால் ஒளிப்பதிவையும், பி. பிரவீன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
காட்டு யானைக்கும் மனிதர்களுக்குமான வாழ்வாதாரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'அரிகொம்பன்' திரைப்படம், வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளதால், திரையரங்குகளில் இதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.