

இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் நடிகர் விஜய் சேதுபதியின் பத்தா படத்தை பாராட்டியுள்ளார். பத்தாவை இரண்டுமுறை பார்த்ததாகவும், குட்டி நட்சத்திரம் சாய் பிரித்விராஜுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பத்தா தொடர்பாக பேசிய அனுராக் காஷ்யப்.,
“இந்த வாரம் ‘பத்தா’ திரைப்படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்தேன். இந்த முறை, நான் இன்னும் பல விஷயங்களைக் கவனித்தேன், அதிகமாக உணர்ந்தேன், மேலும் அதிகமாக அழுதேன்.
இந்தச் சிறுவன் துன்பங்களை அனுபவித்திருக்கிறான் என பத்தா தன் மனைவியிடம் சொல்லும் அந்தக் காட்சி, ஒவ்வொரு முறையும் நம்மை உருக வைக்கிறது.” என தெரிவித்தார்.
மேலும் சாய் பிரித்விராஜுக்கு தேசிய விருது வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தையும் பாராட்டினார். நடிகர் சனத்திற்கு தேசிய விருது வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.