காவியா-அனிருத் திருமண வரவேற்பு அழைப்பிதழ்: ஊழியர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு

சென்னையில் நவம்பர் 21 அன்று அனிருத் காவியா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெறறது.
காவியா-அனிருத் திருமண வரவேற்பு அழைப்பிதழ்: ஊழியர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு
Published on: 
Summary

இசையமைப்பாளர் அனிருத் சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனை திருமணம் செய்துள்ள நிலையில், சன் குழுமம் தனது ஊழியர்களுக்கு ஒரு தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 11 அன்று, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவியா மாறன் ஆகியோர்களின் திருமணம் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதையடுத்து கடந்த நவம்பர் 21 அன்று சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெறறது.

இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து தற்போது சன்குழுமம் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ள திருமண வரவேற்பு அழைப்பிதழ், சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், திருமண அழைப்பிதழ்களுடன், சாக்லேட்டுகள் மற்றும் ஒரு தங்க மோதிரம் அடங்கிய பரிசு இடம்பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து ஊழியர் ஒருவர், அந்த பரிசு பெட்டியை திறந்து, உள்ளே பார்த்த போது, அதில் ஒரு தங்க மோதிரம் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

மற்றொரு பயனர் ஒரு வீடியோவை பகிர்ந்து, “இது நம்ம வீட்டு கல்யாணம். திருமணத்திற்காக எங்கள் முதலாளிகளிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த பரிசு” என குறிப்பிட்டுள்ளார்.

X