மனம் நிறைந்திருக்கிறது.. உங்கள் அன்பிற்கு நன்றி..!- அனிருத் நெகிழ்ச்சிப் பதிவு

அனிருத்- காவ்யா மாறனுக்கும் கடந்த நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது.
Kavya MAran- Anirudh
Published on: 

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருக்கும், சன் நெட்வொர்க் நிறுவனத்தின் செயல் இயக்குநரும், தொழிலதிபருமான காவ்யா மாறனுக்கும் கடந்த நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக நவம்பர் 10-ம் தேதி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

இந்தத் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அந்த திருமணப் புகைப்படங்களை அனிருத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அவை இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு வெளியிட்டுள்ளார்.

எங்கள் உள்ளங்கள் நிறைவாக உள்ளன. உங்கள் அன்பும் ஆசீர்வாதங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு எங்களுக்கு மதிப்புமிக்கவை. எங்களின் புதிய தொடக்கத்தை மேலும் சிறப்பாக்கியதற்கு நன்றி. உங்கள் அன்பு முழுவதையும் நாங்கள் எங்களுடன் சுமந்து செல்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X