மெஸன்ஜர் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்

(PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
மெஸன்ஜர் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்
Published on

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும், பெரும் வெற்றி பெற்ற "சார்" திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவுற்று ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் சிறப்பு போஸ்டரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

மெஸன்ஜர் படத்தின் கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல் சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குநர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அபு பக்கர் இசையமைக்க, பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். விக்ரவாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com