சசிகுமார் நடித்த Freedom படத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில்...

அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமார் நடித்த Freedom படத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில்...
Published on

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகுமார் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பை மே 9 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com