அசுவத்தாமன் அவதாரத்தில் அமிதாப்

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD).படம் வரும் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அசுவத்தாமன் அவதாரத்தில் அமிதாப்
Published on

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறதது.

சென்ற ஆண்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றது.

மிகப் பெரிய பொருட் செலவிலான இந்த திரைப்படம் 6000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதைகள பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. படம் வரும் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அமிதாப் பச்சனின் கேரக்டர் ரிவீலிங் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தில் அமிதாப் பச்சன் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி ஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காண்பித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com