டேவிட் வார்னருக்கு புஷ்பா ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் 'புஷ்பா' பட வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார்.புஷ்பா பட காட்சிகளை வார்னர் ரீல்ஸ் செய்து வெளியிட்டது இணையத்தில் வைரலானது.
allu arjun pushpa
Published on

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' பட வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார். குறிப்பாக இவரது நடனத்திற்கு இந்திய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

புஷ்பா படம் இந்திய ரசிகர்களை மட்டுமில்லாமல் ஆந்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரையும் வெகுவாக கவர்ந்தது. புஷ்பா பட காட்சிகளை வார்னர் ரீல்ஸ் செய்து வெளியிட்டது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புஷ்பா ஸ்டைலில் வார்னர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அல்லு அர்ஜுன், "எனது சகோதரருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com