ஐஷ்வர்யா ராஜேஷின் வைரல் ஃபோட்டோஷூட்

சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார். ’உத்தரகண்டா’ என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஐஷ்வர்யா ராஜேஷின் வைரல் ஃபோட்டோஷூட்
Published on

 தமிழ் திரையுலகில் கடந்த 2019 முதல் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். 2010ம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிறங்கினார்.

தொடர்ச்சியாக தமிழில் "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்", "திருடன் போலீஸ்", "காக்கா முட்டை", "மனிதன்", மற்றும் "தர்மதுரை" போன்ற படங்களில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடத்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'உத்தரகண்டா' என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் கன்னட படம் இதுவே.

இந்நிலையில் அவர் கருப்பு நிற ஜல்லடை ஆடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வியரிங் பிளாக் இஸ் எ வே ஆஃப் லைஃப்" என்ற தலைப்பில் பதிவிட்டுல்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com