‘அடியே OG IS BACK-டி’: வரவேற்பை பெறும் ‘வேட்ட சாமி’ இரண்டாவது பாடல்!

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
‘அடியே OG IS BACK-டி’: வரவேற்பை பெறும் ‘வேட்ட சாமி’ இரண்டாவது பாடல்!
Published on: 

இயக்குநர் செல்வகுமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் அருள்நிதி, அமீர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் ‘வேட்ட சாமி’.

கடவுள் கதையை மையமாக கொண்டு படம் உருவாகி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘வீரரைப் போற்று’ இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ மற்றும் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், இன்று இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.

ஜெகன் கவிராஜ் வரிகளுக்கு புஷ்பவனம் குப்புசாமி குரல் கொடுத்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

செவன் மைல்ஸ் பெர் செகண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ படத்தை தயாரித்துள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், டிசம்பரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X