

நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் பாதித்த மயோசிடிஸ் நோய் குறித்து பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது. மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்தது.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்? என்ற கட்டத்தைத் தாண்டி, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று உள்ளது என்பதை உணர சிறிது காலம் ஆனது. இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அண்மையில் தனது கர்ப்பத்தை முறைப்படி அறிவித்திருந்தார். தான் நடித்து தயாரித்த 'மா இண்டி பங்காரம்' படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், விரைவில் மகப்பேறு விடுமுறை பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் மீண்டும் புதிய திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.