ஜன நாயகன் படத்தில் இணைந்த நடிகை ரேவதி?

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஜன நாயகன் படத்தில் இணைந்த நடிகை ரேவதி?
Published on

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கொடைக்கானலில் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் நடிகை ரேவதி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரேவதி இதற்கு முன் விஜய்யுடன் 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில அவருக்கு சகோதரியாக நடித்து இருந்தார். ஜன நாயகன படத்தில் விஜய்-க்கு அம்மா கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகை ரேவதி தற்பொழுது ஒரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com