இன்றைய நடிகைகள் அதிர்ஷ்டசாலிகள் - நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்!

நாங்கள் பட்ட கஷ்டத்தில் நான்கில் ஒரு பங்கு கூட இன்று இல்லை நன்றாகவே மாற்றம் தெரிகிறது
Ramya Krishnan
Published on: 
Summary

நான் காரில் பயணிக்கும்போதே மேக்கப் செய்து கொள்வேன். ஒரு மணி நேரத்திற்குள் மேக்கப், உடை மாற்றம் என எல்லாவற்றையும் நானே செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன், தனது சினிமா ஆரம்பகால வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும், இன்றைய தலைமுறை நடிகைகளுக்குக் கிடைக்கும் வசதிகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

காரிலேயே மேக்கப் போட்ட அனுபவம்

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் படப்பிடிப்புத் தளங்களில் இருந்த சிரமங்களை விவரித்தார்.

சினிமாவில் நான் அறிமுகமான புதிதில், எனக்கு நானே மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் செய்து கொண்டேன். இரவு நேரப் படப்பிடிப்புகள் இருந்தால், நேரத்தைச் சேமிக்கவும், படப்பிடிப்புத் தளத்திற்குச் சரியான நேரத்திற்குச் சென்றடையவும் நான் காரில் பயணிக்கும்போதே மேக்கப் செய்து கொள்வேன். ஒரு மணி நேரத்திற்குள் மேக்கப், உடை மாற்றம் என எல்லாவற்றையும் நானே செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

இன்றைய நடிகைகள் அதிர்ஷ்டசாலிகள்

தொடர்ந்து பேசிய அவர், இன்றைய சினிமா சூழலையும் ஒப்பிட்டுப் பேசினார்.

அன்று நாங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் இன்று சுகமாகிவிட்டன. நாங்கள் எதிர்கொண்ட கஷ்டங்களில் நான்கில் ஒரு பங்கைக் கூட இன்றைய நடிகைகள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது தனிப்பட்ட உதவியாளர்கள், பிரத்யேக கேரவன்கள் என எல்லாம் மிகவும் எளிமையாகவும் சுலபமாகவும் மாறிவிட்டது.

அந்த வகையில் இன்றைய நடிகைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை அவர்கள் இன்னும் கொஞ்சம் முன்னதாகவே எங்கள் காலகட்டத்தில் திரையுலகிற்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சில சமயங்களில் நான் வியப்பது உண்டு என்று ரம்யா கிருஷ்ணன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

X