இயக்குனர் ஆவதற்கு 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்- நடிகை பார்வதி திருவோத்து

சினிமாவைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. சினிமா சம்பந்தமான விஷயங்கள் மட்டுமே எனக்கு தெரியும். ஒரு நடிகையாக எனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு வரம்புகள் உள்ளது என்றார்.
நடிகை பார்வதி திருவோத்து
நடிகை பார்வதி திருவோத்து
Published on
Summary

திரைக்கதை கிடைத்ததும் அதை படித்து அதில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் எப்படி சித்தரிப்பது என்று சிந்திக்க தொடங்கினேன். நான் திரைக்கதைகளை படிக்கும் விதமே மாறிவிட்டது என்றார்.

அழகு மட்டுமல்ல, நடிப்பிலும் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகை பார்வதி திருவோத்து. கதாநாயகி என்ற எல்லைக்குள் தன்னை சுருக்கிக் கொள்ளாமல், துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி கொண்டிருப்பவர்.

5 ஆண்டுகளாக காத்திருப்பு

இயல்பான தோற்றம், அழுத்தமான நடிப்பு, தன்னம்பிக்கையான அணுகுமுறை என திரையில் தோன்றும் ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பார்வதி, மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரத்துக்குள் தன்னை கரைத்துக்கொள்ளும் நடிகை என்ற பெருமைதான் பார்வதியின் தனிச்சிறப்பு. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் புதிய படத்தை இயக்குவதற்காக 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். நல்ல தயாரிப்பாளர் கிடைப்பார் என ஆவலுடன் இருக்கிறேன். படத்திற்கான கதை எழுதும் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இன்னும் சில பணிகள் உள்ளன. விரைவில் படப்பிடிப்பை தொடங்குவேன் என நம்புகிறேன். எனக்காக நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.

சினிமாவைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. சினிமா சம்பந்தமான விஷயங்கள் மட்டுமே எனக்கு தெரியும். ஒரு நடிகையாக எனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு வரம்புகள் உள்ளது.

இயக்கத்தின் மூலம் என் கற்பனை திறனை அதற்கு அப்பாலும் வெளிகொண்டு வர முடியும். திரைக்கதை கிடைத்ததும் அதை படித்து அதில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் எப்படி சித்தரிப்பது என்று சிந்திக்க தொடங்கினேன். நான் திரைக்கதைகளை படிக்கும் விதமே மாறிவிட்டது என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com