இது ஒரு சிறிய தொடக்கம் தான்: 3,700 மீட்டர் உயரத்தில் சாகசப் பயணம் செய்த நடிகை கயாடு லோஹர்!

உத்தரகாண்ட் -ன் தயாரா புக்யால் சிகரத்தை ஏறி இன்னும் பல சிகரங்களை அடைய வேண்டியுள்ளது - கயாடு லோஹர்.
Kayadu Lohar
Published on: 
Summary

தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை கயாடு லோஹர், இமயமலையின் 3,700 மீட்டர் (சுமார் 12,139 அடி) உயரமுள்ள தயாரா புக்யால் பகாரியா டாப் சிகரத்தை வெற்றிகரமாக மலையேறி அடைந்துள்ள புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சாகசப் பயணமும் புகைப்படங்களும்

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தயாரா புக்யால் மலையேற்றப் பாதையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிகரத்தின் உச்சியை அடைந்த தருணங்களை புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார்.

பனி படர்ந்த மலைச்சிகரங்கள், குளிர்கால ஜாக்கெட்டுகள், மலைப்பாதையில் ஏறும் காட்சிகள், கூடாரம், இரவு நேர நெருப்பு மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்கள் எனப் பல சுவாரஸ்யப் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார்.

கயாடு லோஹரின் நெகிழ்ச்சிப் பதிவு

இந்தப் புகைப்படங்களுடன் கயாடு லோஹர் வெளியிட்டுள்ள பதிவில், "பல சிகரங்களின் முதல் பயணம் இது... தயாரா புக்யால் பகாரியா டாப் 3,700 மீட்டர். இது ஒரு சிறிய தொடக்கம்தான்; இன்னும் பல சிகரங்களை அடைய வேண்டியுள்ளது.

நான் எப்போதும் ஒரு மலைப் பெண்ணாகவே இருந்துள்ளேன், இனியும் அப்படியே இருப்பேன். இதைவிட எனக்குப் பிடித்தமான இடம் வேறு எதுவுமில்லை" என மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

நடிகை கயாடு லோஹரின் இந்தச் சாகசப் பயணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே 2.8 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களைக் குவித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடினமான மலையேற்றத்தை வெற்றிகரமாக முடித்த இவரைப் பாராட்டி, "மலைகளின் ராணி" என்றும், உங்களின் சாகசப் பயணம் எங்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது என்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X