

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகை அசின், தனது 9 வயது மகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார். 12 மொழிகளை பேசும் மகளுக்கு செல்போன், டி.வி. போன்றவற்றை தவிர்த்து, உயர்ந்த கல்வி புத்தகங்களை வழங்கி, அவரது திறமையை மேம்படுத்த உதவுகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அசின்.
மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு 9 வயது உள்ள ஒரு மகளுக்கு தாயாக அசின் இருந்து வருகிறார். அசின் மகள் குறித்து அவரது கணவர் ராகுல் சர்மா கூறியதாவது:-
என்னால் இரண்டு மொழிகளை கூட ஒழுங்காக பேச முடிவதில்லை. நாங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியோடு நின்று விட்டோம். ஆனால் மகள் ஆரின் சுமார் 12 மொழிகளை புரிந்து கொண்டு பேசுகிறார். அதில் கொரியன், ஜப்பானிய மற்றும் சீன மொழிகளும் அடங்கும்.
மகளின் வளர்ப்பில் அசின் முக்கிய பங்கு வகிக்கிறார். அவருக்கு ஒரு மொபைல் போனோ, தொலைக்காட்சியோ என எந்தவிதமான நேரத்தையும் அவருக்கு வழங்காமல் மகள் இப்போது இரண்டாம் வகுப்பு படித்தாலும் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கான புத்தகங்களை கூட வீட்டில் வைத்திருக்கிறார். இதற்கு காரணம் மகள் மீது அசின் காட்டும் அக்கறையே...
இவ்வாறு அவர் கூறினார்.