மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை நினைவுகூர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.இன்று அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழு ’சல்யூட்டிங் மேஜர் முகுந்த்’ என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை  நினைவுகூர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்
Published on

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள் அந்த வீடியோ சமூக வலைத்தளங்கள்ளில் வைரலானது.

தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்திய நாட்டுக்காக சிறப்பான சேவையை செய்து நாட்டுக்காக உயிர் தாகம் செய்தார். இன்று அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழு 'சல்யூட்டிங் மேஜர் முகுந்த்' என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் அவரது நினைவு இடத்திற்கு சென்று சல்யூட் அடித்த படி ஒரு புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " காற்று அசைவதால் நமது தேசிய கொடி பறப்பதில்லை, அதை பாதுகாக்க உயிரை விட்ட அனைத்து வீரர்களின் கடைசி மூச்சில் தான் தேசியக் கொடி பறக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com