தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சிபிராஜ்- ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை

சிபிராஜ்- ஈஷ்வர் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த இதர அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சிபிராஜ்
Published on: 
Summary

சிபிராஜ் தனது புதிய பட நிறுவனம் 'அண்டர்டாக் பிலிம்ஸ்' மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ரசிகர்கள் தனது முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகன் சிபிராஜ், 'ஸ்டூடண்ட் நம்பர் 1' என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். கடைசியாக 'டென் ஹவர்ஸ்' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

புதிய பரிமாணம்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜ் தற்போது சினிமாவில் புதிய பரிமாணம் எடுத்துள்ளார். அதன்படி நடிகர் தாண்டி தயாரிப்பாளராகவும் அவர் களமிறங்குகிறார்.

கோரிக்கை

அண்டர்டாக் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்தில் முதல் படைப்பில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை 'ஜீப்ரா' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்.

இதுகுறித்து சிபிராஜ் கூறும்போது, "சினிமாவை நம்பி புதிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். சினிமாவுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன். எனது புதுமுயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும்" என்றார்.

சிபிராஜ்- ஈஷ்வர் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த இதர அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com