வாழ்க்கையில் வெற்றி பெற... நெப்போலியன் கொடுக்கும் அட்வைஸ்

வாழ்க்கையில் உணவு, உடை, வீடு என அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பணம் அவசியம். அதற்காகச் சம்பாதிக்க வேண்டும்.
நெப்போலியன்
நெப்போலியன்
Published on: 
Summary

வாழ்க்கையில் வெற்றி பெற சிந்தனை, திட்டமிடல், கடின உழைப்பு ஆகியவை முக்கியம் என நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார். விடாமுயற்சியுடன் செயல்படுவதன் மூலம் மட்டுமே இலக்கை அடைய முடியும் என்றும், வெற்றிக்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் நெப்போலியன். தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘அமெரிக்க ஆவி’ படத்தைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் நெப்போலியன் அளித்தபேட்டியில் வாழ்க்கை, வெற்றி, பணம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். நெப்போலியன் கூறியதாவது:-

விடாமுயற்சி

வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் நன்றாகச் சிந்திக்க வேண்டும். சிந்திப்பதுடன் நின்றுவிடாமல், நமது இலக்கை அடைவதற்கான வழிகளைக் கண்டறிந்து கடினமாக உழைக்க வேண்டும். பலர் திட்டமிட்டு எழுதிவைத்துச் செயல்படத் தொடங்கினாலும், பாதியிலேயே முயற்சியைக் கைவிட்டு விடுகின்றனர். விடாமுயற்சியுடன் உழைப்பவர்களால்தான் வெற்றி பெற முடியும். நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது; அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் உணவு, உடை, வீடு என அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பணம் அவசியம். அதற்காகச் சம்பாதிக்க வேண்டும். அதே நேரத்தில், அளவுக்கு அதிகமாகச் சம்பாதித்துச் சேமிக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. எதுவுமே தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு சம்பாதிக்காமல் இருப்பதும் சரியல்ல. நமது வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com