இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம்- நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

கார்த்திக் சபேஷ் ‘வல்லவன்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100 டிகிரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கார்த்திக் சபேஷ்
Published on: 

இசையமைப்பாளர் மறைந்த தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 37.

கார்த்திக் சபேஷ் ‘வல்லவன்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100 டிகிரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கார்த்திக் சபேஷின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் கார்த்திக் சபேஷின் மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சபேஷ் உயிரிழந்த நிலையில் ஓராண்டுக்குள் அதே அக்டோபர் மாதத்தில் தேவா மற்றும் கார்த்திக் சபேஷ் உயிரிழந்திருப்பது தமிழ்த் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com