பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் நடிகர் அட்டக்கத்தி தினேஷ்... விரைவில் திருமணம்?

பந்தா கேங்ஸ் என்ற புதிய படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கிறார்.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் நடிகர் அட்டக்கத்தி தினேஷ்... விரைவில் திருமணம்?
Published on: 

நடிகர் அட்டக்கத்தி தினேஷை காதலிப்பதாக பிரபல தொகுப்பாளினி ஆர்.ஜே.எழிலரசி தெரிவித்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள எழிலரசி.,

“என் அன்பானவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் உனக்கு சிறந்ததே கிடைக்க வாழ்த்துகிறேன். வாழ்க்கையில் எந்த சூழல் வந்தாலும் நான் ஒவ்வொரு பொழுதும் தேர்ந்தெடுப்பது உங்களை மட்டும்தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விளையாட்டாக, “பெண்கள் அனைவரும் தினேஷை தூரத்தில் இருந்தே ரசியுங்கள், நன்றி” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு கூட இவர்கள் இருவரும் ஒன்றாக சின்னத்திரை நடிகர் தினேஷின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் நேற்று தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடையே தங்களது காதலை தெரியப்படுத்தியுள்ளார் தொகுப்பாளினி எழிலரசி.

இதனைத்தொடர்ந்து விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறலாம் என ரசிகர்கள் இணையத்தில் கூறிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com