

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென், ஆனந்த் ராஜ், லால், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் சீன்.
2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.
இந்நிலையில் வெளியான 5 நாட்களில் ரூ.205 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் 2026ம் ஆண்டில், சூர்யாவுக்கு கிடைத்த மூன்றாவது தொடர் வெற்றிப் படமாகவும் இது அமைந்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரூ.310 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் ரூ.210 கோடி வசூலித்தது.