

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளப் படம் மூக்குத்தி அம்மன்2. குஷ்பு, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா படம் தொடர்பாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,
“சில திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்தாலும் மனதிற்கு நெருக்கமாக தங்கவிடும். அப்படி ஒன்றுதான் எனக்கு மூக்குத்தி அம்மன் 2.
எனது இயக்குநர் சுந்தர் சி. அவர்களுக்கு, உங்கள் தொலைநோக்குப் பார்வை, கனிவு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை இந்தப் படத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் காட்டிய அக்கறைக்கும், இந்தப் பயணத்தை இவ்வளவு மறக்க முடியாத ஒன்றாக மாற்றியமைத்ததற்கும் நன்றி. இந்தப் படத்திற்காக நான் உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.
எனது தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் அவர்களுக்கு, இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எங்களுக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி. ஒரு கதையை முழு மனதுடன் நம்பும் தயாரிப்பாளர் கிடைப்பது, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது.
ரெஜினா, இந்தப் பயணத்தை உன்னுடன் பகிர்ந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உனது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் உனக்கு அன்பும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
குஷ்பு மற்றும் சினேகா உடன் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றியதை நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் என் அன்பான அரவணைப்பையும், நிறைந்த அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வளவு அற்புதமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நாங்கள் இணைந்து உருவாக்கிய இந்த உலகத்தை, நீங்கள் அனைவரும் திரையில் காணும் தருணத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.