வருங்கால கணவரிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள்: நடிகை சாய் பல்லவி பகிர்ந்த தகவல்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ‘கெளன் பனேகா குரோர்பதி’ சீசன் 18 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
Sai Pallavi - Amitabh bachchan
Published on: 
Summary

பாலிவுட்டில் ஒளிபரப்பட்டு வரும் ‘கெளன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில், நடிகை சாய் பல்லவின் வருங்கால கணவர் குறித்து நடிகர் அமிதாப் பச்சன் கேள்வி எழுப்பினார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ‘கெளன் பனேகா குரோர்பதி’ சீசன் 18 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தீபாவளி பண்டிகையின் எபிஷோடை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டு, திரைத்துறை அனுபவங்களையும் மற்றும் பொது வாழ்க்கை குறித்தான தனது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவரிடம் தங்களின் வருங்கால கணவர் எவ்வாறு இருக்க வேண்டும் என அமிதாப் பச்சன் கேள்வி எழுப்பினார்.

கணவரிடம் இருக்க வேண்டிய குணங்கள்

இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, “முதலில் அவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என கூறினார்.

பின்னர் அவர் ஒரு சுயநலவாதியாக இருக்கக்கூடாது எனவும், அவர் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்பவராக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் தனது வருங்கால கணவர், தனது செயல்களை தானே சரிபார்த்து கொள்பவராக இருக்க வேண்டும் என்றும், வாழ்க்கையில் தான் இருக்கும் நிலையை பற்றிய ஒரு புரிதல் உள்ளவராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர் தவறுகள் செய்யலாம், ஆனால் அதை அவர் சரிசெய்துகொள்ள வேண்டும். அதற்காக அவர் மற்றவர்கள் மீது பழி போடுபவராக இருக்க கூடாது.

இது ஒரு பெரிய பட்டியல் அல்ல, ஆனால் அவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும். மேலும் அவருக்கு சமைக்கவும் தெரிந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்” என கூறினார்.

X