2k லவ் ஸ்டோரி-ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படம்.ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது.
2k லவ் ஸ்டோரி-ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Published on

City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி".

2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் டி.இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, 2k லவ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படக்குழுவினர் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com