'தங்க மீன்கள்', தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' போன்ற தரமான வாழ்வியல் கதைகளைத் தயாரித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான JSK Film Corporation, தனது அடுத்த படைப்பாக தயாரித்துள்ள த்ரில்லர் திரைப்படம் 'Dhik.Dhik..Dhik…'.
இப்படத்தின் அதிரடி டீசர் வெளியாகி, 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையதளங்களில் பெரும் சாதனையைப் படைத்து வருகிறது.
இப்படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி பலம் சேர்க்கும் வகையில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆர்யா ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இதனை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் தளங்களில் தடம் பதித்து வரும் இந்த டீசர், தற்போது தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் பெரிய திரையிலும் திரையிடப்பட்டு வருகிறது.
தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் இப்போதே இந்த டீசரை பெரிய திரையில் பார்த்து வியந்து வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.
தயாரிப்பாளர் JSK சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் ஸ்ரீநிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் ரகு ராஜகோபாலுடன் இணைந்து படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையை எழுதியுள்ளார்.
சென்னையைப் பின்னணியாகக் கொண்டு, ஒரே இரவில் நடக்கும் அதிரடி சஸ்பென்ஸ் கதையாக இப்படம் செதுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான த்ரில்லர் பாணியில் இருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான மிக முக்கியமான ஒரு சமூகக் கருத்தையும் மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பாவெல் நவநீதன், ஜேஎஸ்கே சதீஷ் குமார், சாந்தினி தமிழரசன், சாண்ட்ரா ஆமி மற்றும் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு DK இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரகு ராஜகோபாலும் படத்தொகுப்பை பிரேம் B -யும் கலை இயக்கத்தை SS சுசி தேவராஜ் ஆகியோர் இப்படத்திற்காக பணியற்றி இருக்கிறார்கள்.
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவான ‘ஃபையர்’ படத்தைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ‘குற்றம் கடிதல் 2’ திரைப்படமும் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இத்திரைப்படமும் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தயாரிப்புத் தரப்பில் அறிவித்துள்ளது.
டீசர் புரமோஷனிலேயே மிரட்டி வரும் 'Dhik.Dhik..Dhik…' படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர்.