விஜய் ஆண்டனிக்கு கைக்கொடுக்கும் சிரஞ்சீவி

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட இருக்கிறார்.
விஜய் ஆண்டனிக்கு கைக்கொடுக்கும் சிரஞ்சீவி
Published on
இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையால் ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்தாரோ தற்போது அதைவிட அதிகமாகவே நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் சூப்பர் ஹிட்டானது. தமிழ் மட்டுமல்லாமல் இப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’, ‘எமன்’ படங்களும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழைப் போலவே தெலுங்கில் இவரது படங்களுக்கு வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது ‘அண்ணாதுரை’ படம் உருவாகி வருகிறது.

இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி, செப்டம்பர் 5ம் தேதி வெளியிட இருக்கிறார். இப்படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com