மகள் நடிப்பதற்கு தடை விதித்த சேத்தன் - தேவதர்ஷினி

தேவதர்ஷினி - சேத்தன் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் 96 படத்தில் அறிமுகமான அவர்களது மகள் நியதி தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தடை விதித்திருக்கிறார்கள். #Chetan #Devadarshini
மகள் நடிப்பதற்கு தடை விதித்த சேத்தன் - தேவதர்ஷினி
Published on

தேவதர்ஷினி - சேத்தன் இருவருமே தம்பதிகளாகவே டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். அவர்கள் வழியில் மகள் நியதியும் 96 படம் மூலம் நடிகையாகி இருக்கிறார். தேவதர்ஷினியின் சிறுவயது வேடத்தில் நடித்தவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

தாம் தூம் படம் மூலம் அறிமுகமான சேத்தன் சமீபத்தில் வெளிவந்த தமிழ்படம் 2 படத்திலும் கலக்கி இருந்தார். களவு படத்திலும் நடித்திருந்தார். இதுபற்றி அவர் கூறும்போது ‘இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர். எனக்கு பாசிடிவ், நெகடிவ், காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த வி‌ஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன். என் மனைவி தமிழ், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள் இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமாவே குடும்பம். குடும்பமே சினிமா என்று இருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா, சசிகுமாருடன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார். #Chetan #Devadarshini #Niyathi

X

Maalai Malar
www.maalaimalar.com