சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சீமராஜா’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha
சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை
Published on

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் (13-ந்தேதி) வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீமராஜா படத்தை இணையதள சேவை நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 3,500 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட வாய்ப்பு உள்ளதாக அறிகிறேன். இதை அனுமதித்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே, சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனங்கள் சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

X

Maalai Malar
www.maalaimalar.com