செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
Published on

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக படத்தில் நடித்துள்ள முன்னணி நட்சத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும், அவர்களது ஜோடிகளையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வந்தது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் டப் செய்யப்படும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #ChekkaChivanthaVaanam #CCV

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com