தணிக்கைக் குழுவில் பாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்

ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படக்குழுவை பாராட்டியுள்ளனர். #60VayaduMaaniram #VikramPrabhu
தணிக்கைக் குழுவில் பாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்
Published on: 

இயக்குனர் ராதா மோகன் ஜோதிகாவை வைத்து அவர் இயக்கியுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவர் இயக்கியுள்ள மற்றொரு படமான ‘60 வயது மாநிறம்’ வரும் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். 

படத்தின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி, இயக்குநரைப் பாராட்டியுள்ளனர். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். #60VayaduMaaniram #VikramPrabhu #Indhuja

X