சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்

ஐதராபாத்தில் நடைபெற்ற சமந்தா - நாகசைதன்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
Published on

நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கோவாவில் கடந்த அக்டோபர் 6, 7 தேதிகளில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இதில் நாகசைதன்யா மற்றும் சமந்தாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலகத்தினர் என 183 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சமந்தாவும் - நாகசைதன்யாவும் தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பினார்கள். மேலும் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நெருங்கி நண்பர்களுக்கு விருந்து அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com