ஹன்சிகாவின் இடத்தை பிடித்த கேத்தரின் தெரசா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வராவிட்டாலும் அவ்வப்போது தலையை காட்டிச் செல்லும் கேத்தரின் தெரசா தமிழில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் இடத்தை பிடித்திருக்கிறார்.
ஹன்சிகாவின் இடத்தை பிடித்த கேத்தரின் தெரசா
Published on

தமிழில் இந்த படத்தை இயக்கிய லஷ்மண் தெலுங்கு பதிப்பையும் இயக்க இருக்கிறார். இதில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழில் ஹன்சிகா நடித்த கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த் சாமி இடம்பெறவில்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே `தனிஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான `துருவா' படத்தில் அரவிந்த்சாமியே நடித்திருந்தார். அரவிந்த் சாமி கதாபாத்திரம் மற்றும் மற்ற கதாபாத்திரங்களை படக்குழு தேர்வு செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி, தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப போகன் படத்தின் இரண்டாவது பாதியில் சில மாற்றங்களை கொண்டு வரவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com