வைரலாகும் ஜெய்யின் நான் ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் சாங்

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்மாரி படத்தின் நான் ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஜெய்
ஜெய்
Published on

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கேப்மாரி’.  ஜெய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதுல்யா ரவி, வைபவி ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார்கள். 

இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தின் நான் ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிசம்பர் 13ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com