சென்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

பொல்லாதவன், ஆடுகளம் படத்தில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சென்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. #Sendrayan
சென்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது
Published on

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ’ஆடுகளம்’, ‘மூடர் கூடம் என பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார்.

இவர் கயல்விழி என்பவரை காதலித்து மணந்தார். இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ராயன் இருந்த போதுதான் கயல்விழி கர்ப்பமான செய்தி வெளியில் தெரிந்தது.

சினேகாவின் ரசிகையான தனது மனைவியின் ஆசையை நிறை வேற்றும் விதமாக கர்ப்பமாக இருந்த கயல் விழியை சினேகாவின் வீட்டுக்கே அழைத்துச் சென்று சந்திக்க வைத்து ஆச்சர்யப்படுத்தினார்.

தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சீமந்தம் நடந்து பெற்றோர் வீட்டுக்குச் சென்ற கயல்விழி, நேற்று மாலை 3.30 மணியளவில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com