இணையத்தில் லீக் ஆன பாக்ஸர் பட பர்ஸ்ட் லுக்

‘தடம்’ படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடித்து வரும் ‘பாக்ஸர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on

'தடம்’  படத்தை தொடர்ந்து அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்கிற படத்தில் நடித்து வருகின்றார். விவேக் இயக்கம் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. 

இந்த படத்திற்காக சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானியிடம் அருண் விஜய் பாக்சிங் பயிற்சி எடுத்து நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் லீக் ஆனது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த படக்குழு பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. 

இது குறித்து அருண்விஜய் கூறுகையில், " மாஃபியா படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியிட்டோம்.  அதனால் பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில மாதங்கள் கழித்து வெளியிட திட்டமிட்டிருந்தோம். திடீரென லீக் ஆனது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் மக்கள் அதற்கு தரும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்காக 9 மாதம் கடினமாக  உழைத்துள்ளேன்" என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com