பிளாக் பேந்தர் நடிகர் காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி

உலக புகழ் பெற்ற பிளாக் பேந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
பிளாக் பேந்தர் நடிகர்
பிளாக் பேந்தர் நடிகர்
Published on

இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக மக்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் இப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்த சாட்விக் போஸ்மேன் மரணமடைந்துள்ளார். இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 43 வயதான சாட்விக் போஸ்மேன் கடந்த 4 வருடமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளார். இவருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com