நயன்தாரா படத்தில் குத்தாட்டம் போட்ட பிஜிலி ரமேஷ்

யூடியூப்பில் மிகவும் பிரபலமான பிஜிலி ரமேஷ், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். #Nayanthara
நயன்தாரா படத்தில் குத்தாட்டம் போட்ட பிஜிலி ரமேஷ்
Published on

நயன்தாரா நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் அஜித்துடன் ‘விஸ்வாசம்’, அறிவழகன் இயக்கும் படம், சர்ஜுன் இயக்கும் படம், சிவகார்த்திகேயன் படம் அடுத்துடுத்து பிசியாக நடித்து வருகிறார்.

இதில் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இதற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் ‘கபீஸ்கபா’ என்ற பாடலின் புரமோ வீடியோவை அனிருத் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் யூ-டியூபில் மிகவும் பிரபலமான பிஜிலி ரமேஷ் நடனமாடியுள்ளார். தற்போது இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com