காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் இணைந்து ரொமான்டிக் காமெடி பலந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். #MahatRagavendra #AishwaryaDutta
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவின் செயல்பாடுகள் அதிக விமர்சனங்களைச் சந்தித்தன. அதன் மூலம் அவர் அதிக கவனம் பெற்றார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

பிக்பாசில் அவரோடு இணைந்து கலந்துகொண்ட மகத் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம்.சி இயக்குகிறார். இவர் ஹாலிவுட் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். ரொமாண்டிக் காமெடி கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விபரம் விரைவில் வெளியாக உள்ளது. 

மகத் தற்போது சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா, ஹரிஷ் கல்யாண் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே பாணியில் மகத், ஐஸ்வர்யா களம் இறங்கி உள்ளனர். #MahatRagavendra #AishwaryaDutta

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com