இறுதிக்கட்டத்தில் அரவிந்த்சாமியின் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்'

சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
இறுதிக்கட்டத்தில் அரவிந்த்சாமியின் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்'
Published on

இதில் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படத்தை சித்திக் இயக்குகிறார். அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி மாலத்தீவில் படமாக்கப்பட இருக்கிறது. அத்துடன் படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது.

மீதமுள்ள பாடல் காட்சிக்காக படக்குழுவினர் வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com