மீண்டும் வில்லனாக களமிறங்கும் பாரதிராஜா

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறார். #BharathiRaja #Rocky
மீண்டும் வில்லனாக களமிறங்கும் பாரதிராஜா
Published on

கல்லுக்குள் ஈரம் படத்துக்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த பாரதிராஜாவை தனது ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக மணிரத்னம் நடிக்க வைத்தார்.

தொடர்ந்து ‘பாண்டிய நாடு’ படத்தில் பயந்த சுபாவம் கொண்டவராகவும், ‘குரங்கு பொம்மை’ படத்தில் வெகுளியாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான வசந்த் ரவி நடிக்கும் படத்தில் பாரதிராஜா மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.

ராக்கி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார். #BharathiRaja #Rocky

X

Maalai Malar
www.maalaimalar.com