‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திடீர் மாற்றம்.... பிரபல இயக்குனர் இணைகிறார்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் பட போஸ்டர்
பொன்னியின் செல்வன் பட போஸ்டர்
Published on

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா,  நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர்.

மேலும் கதைப்படி பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் பிரபு மற்றும் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. தற்போது அவர்கள் இருவருக்கும் வேறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நிழல்கள் ரவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அசுரன், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண்18/9 போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் கதைப்படி பார்த்தால், பாலாஜி சக்திவேலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பார் எனத் தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com