

அந்த வகையில் `பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' வரிசையில் இதுவரை 8 பாகங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் வின் டீசல், பால் வாக்கர், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ், டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் ஸ்டாதம் டுவைன் ஜான்சன், கர்ட் ரசல், நாதாலியா இம்மானுவேல், சார்லஸ் தெரோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் பால் வாக்கர் 7-வது பாகம் உருவாகும் போது கார் விபத்தில் உயிரிழந்தார் இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும் இந்த படத்தின் மீதான மவுசு குறையவில்லை.
இந்நிலையில், விறுவிறுப்பாக உருவாகி வரும் 9-வது பாகமான `பாஸ்ட் அண்ட் பியூரியஸ் ஸ்பின் ஆஃப்' வருகிற 2019 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.