பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல குழந்தை நட்சத்திரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
Published on

‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா பீதியால் இதன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பேபி சாரா இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் மகளாக ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் பேபி சாரா. தொடர்ந்து, ‘சைவம்’, ‘விழித்திரு’,‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com