அவள்

மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்ணி நடிப்பில் உருவாகி இருக்கும் 'அவள்' படத்தின் முன்னோட்டம்.
அவள்
Published on

உறைய வைக்கும் திகில் படங்கள் சினிமா ரசிகர்களை எப்போதுமே கவரும். அந்த வகையில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி  நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் வெளியான நாளில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இசை - கிரிஷ், ஒளிப்பதிவு - ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு - லாரன்ஸ் கிஷோர், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், கதை - மிலண்ட் ராவ், சித்தார்த், இயக்கம் - மிலண்ட் ராவ்.

இது குறித்து 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பேசுகையில்,

''உண்மையாகவே பயமுறுத்தி நடுங்கவைக்கும் படம் தான் 'அவள்'. ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையாக 'அவள்' உள்ளது என உறுதியாக கூறலாம். பல விதமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் துணிச்சலாக ஏற்று நடித்து ஜொலிப்பவர் நடிகர் சித்தார்த். நவம்பர் 3-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள 'அவள்' தமிழ் சினிமா ரசிகர்களை திகிலில் உறைய வைப்பது நிச்சயம்.''

இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த்தும் எழுதியுள்ளார். நடிகர் அதுல் குல்கர்னி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையில், ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் 'அவள்' உருவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com